தமிழகம் முழுவதும் இடியாப்பம் விற்போருக்கு புது சிக்கல்? தமிழக அரசு கெடுபிடி!

 
இடியாப்பம்

தமிழகத்தில் காலை மற்றும் இரவு நேரங்களில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்பவர்களின் வாழ்வாதாரத்தில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், உணவு பாதுகாப்புத் துறை புதிய அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி இனி தமிழக உணவு பாதுகாப்புத் துறையின் புதிய விதிமுறைகளின்படி, தெருவோரங்களில் இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் அனைவரும் இனி உணவு பாதுகாப்பு உரிமம் (FSSAI Registration) பெற்றுத்தான் விற்பனை செய்ய வேண்டும்.

சைக்கிள், பைக் அல்லது தள்ளுவண்டிகளில் வைத்து விற்பனை செய்பவர்களுக்கும் இது பொருந்தும். இந்த உரிமத்தை ஆண்டுக்கு ஒருமுறை முறையாகப் புதுப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விற்பனை செய்பவர்கள் உரிமம் பெறுவதோடு மட்டுமல்லாமல், பின்வரும் சுகாதார விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

 சிறுதானிய இடியாப்பம்

இடியாப்பத்தைப் பரிமாறும்போது கைகளில் உறைகளை அணிந்திருக்க வேண்டும். உணவு தயாரிக்கும் போதும், விற்பனை செய்யும் போதும் தலைமுடியை மூடும் வகையில் உறை அணிந்திருக்க வேண்டும். உணவு கொண்டு செல்லும் பாத்திரங்கள் மற்றும் வாகனங்கள் மிகவும் தூய்மையாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

இந்த அறிவிப்பால் சிறு வியாபாரிகள் அச்சப்படத் தேவையில்லை என்றும் உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் இந்த உரிமத்தை ஆன்லைன் வாயிலாக எவ்வித கட்டணமுமின்றி இலவசமாகவே பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். எளிய முறையில் பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளதால், வியாபாரிகள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இடியாப்பம்

தெருவோரங்களில் விற்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்யவும், மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுபவர்கள் மற்றும் உரிமம் இன்றி விற்பனை செய்பவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!