மாணவர்களே உஷார்... 10 , 12ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை களைய அரசு தேர்வுகள் இயக்ககம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2023ம் ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில், மதுரையில் உள்ள பள்ளியில் மாணவரின் விடைத்தாளின் முதல் பக்கத்தை அகற்றி வேறு விடைத்தாளுடன் இணைத்து முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், விடைத்தாளில் இதுபோன்ற முறைகேடுகளை தவிர்க்கும் வகையில் அரசுத் தேர்வுகள் இயக்ககம் விடைத்தாள்களின் பராமரிப்புப் பணிகளை நேரடியாக மேற்கொள்ளவுள்ளது.விடைத்தாளில் மாணவர்களின் விவரங்கள் இடம்பெற்றிருக்கும் முதல் பக்கத்தை இதுவரை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டு வந்தனர்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்வுக்காக ஒவ்வொரு மாவட்டத்தில் மையம் அமைக்கப்பட்டு தேர்வுகள் இயக்ககத்தின் கண்காணிப்பில் நேரடியாக விடைத்தாளின் முதல் பக்கம் இணைக்கப்பட்டு வருகின்றது. அதேபோல், விடைத்தாள்களின் அனைத்து பக்கங்களும் முழுமையாக இணைக்கப்பட்டு, முதல் பக்கத்தை அகற்ற முடியாத வகையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!