அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

 
ஓட்டுனர், நடத்துனர்

தமிழக அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து போக்குவரத்து துறை முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் அரசுப் பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆட்டோ, கார்களில் செல்வதை விட மிக, மிக குறைவான கட்டணம், அனைத்து இடங்களுக்கும் சர்வீஸ் போன்ற காரணங்களில் மக்களின் பயன்பாடு அதிக அளவு உள்ளது. 

ஓட்டுனர் நடத்துனர்

மகளிர்களுக்கு உதவிடும் வகையில், விடியல் திட்டத்தின் கீழ் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம். இதனால் மாதம் ஒன்றுக்கு 1000 ரூபாய் வரை மக்கள் சேமிக்க முடிகிறது. இந்நிலையில் ஒரு சில இடங்களில் பேருந்து சேவை சரியான வகையில் இயக்கப்படுவட்ஹு இல்லையென தொடர் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

 

இந்நிலையில் ஓட்டுநர் மற்றும் நடத்துகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பான அறிக்கையை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர் நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பேருந்து பணிமனைகளில் தினசரி இயக்கப்பட வேண்டிய பேருந்துகளுக்கு, ஒரு நாள் முன்னதாக Control Chart - தயார் செய்து ஓட்டுனர் நடத்துனர்களிடம் கையொப்பம் பெற வேண்டும் 

ஓட்டுனர் நடத்துனர்

அவசர தேவைகளுக்காக ஒரு நாள் முன்னதாக மாலை 5 மணிக்குள் விடுப்பு தெரிவிக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து பேருந்துகளை இயக்க வேண்டும் 

பொதுமக்கள் அதிகம் பயணம் செய்யும் காலை மற்றும் மாலை நேரங்களான Peak Hours நேரத்தில் இயக்கப்படும் General Shift பேருந்துகளை எக்காரணம் கொண்டு Single Shift ஆக இயக்க படக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே போல் முகூர்த்த நாட்களில் அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண்டும், மகளிர் விடியல் பயணம் தொடர்பான சாதாரண கட்டண பேருந்துகள் தினமும் இயக்கப்படுவதினை உறுதிப்படுத்த வேண்டும்.

முக்கியமாக அடிக்கடி பணிக்கு வராமல் முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும். 

Stalwart / Team Force ஓட்டுநர் நடத்துனர்களை Vacant உள்ள இடங்களில் Posting போட வேண்டும் என போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web