ட்விட்டர் பயனர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!! எலான் மஸ்க் அதிரடி!!

 
ட்விட்டர்

ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியது முதல் பல அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகின்றனர். ட்விட்டர் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் தினசரி இன்று என்ன கட்டுப்பாடுகளோ என முணுமுணுக்கும் அளவுக்கு பல அதிரடி நடவடிக்கைகளை எலான் மஸ்க் மேற்கொண்டு வருகிறார் . ப்ளூ டிக் வசதி, வெரி பைட் அக்கௌண்ட், மாதாந்திர கட்டணம் என அடுத்தடுத்து பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு நாளைக்கு இத்தனைதகவல்களை மட்டுமே படிக்க முடியும் என கட்டுப்பாடு விதித்துள்ளார். அதன்படி  வெரிபைட் பயனர்கள் ஒரு நாளைக்கு 10,000 ட்விட்களையும்,   வெரிபைட்  செய்யாத பயனர்கள்  ஒரு நாளைக்கு 1000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும். அதே சமயம் ட்விட்டரில் புதிதாக இணைந்திருப்பவர்கள் ஒரு நாளைக்கு 500 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும் என அறிவித்துள்ளார்.

ட்விட்டர்

இந்த திடீர் அறிவிப்பு பயனர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.   டேட்டா ஸ்கிராப்பிங்கை தடுப்பதற்காக தற்காலிகமாக இந்த கட்டுப்பாடு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக எலான் மஸ்க் விளக்கம் அளித்துள்ளார்.  தனியார் நிறுவனமாக பங்குசந்தையில் இயங்கி வந்த இந்த நிறுவனத்தை மொத்தமாக எல்லா பங்கையும் விலை கொடுத்து வாங்கினார் எலான் மஸ்க்.   ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உடன்   ஊழியர்கள் பலரை பணியில் இருந்து நீக்கினார். அதில் ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பராக் அக்ரவாலும் குறிப்பிடத்தக்கவர். பின்னர் ட்விட்டர் நிறுவன பணியாளர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பும் நீக்கப்பட்டது.  திடீரென ட்விட்டர் நிறுவனம் ப்ளூ டிக்கை நீக்குவதாக அறிவித்தது. இனி ப்ளூ டிக் வைத்திருக்க காசு கொடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் ப்ளூ டிக் ஒரு மாதத்திற்கு ரூ900 ஆக   நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் பலரின் ப்ளூ டிக் மொத்தமாக ஒரே நாளில்  காணாமல் போனது.  தற்போது போஸ்டுகளை பார்ப்பதிலும் எலான் மஸ்க் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார்.  அதன்படி இனி வெரிபைட் பயனர்கள் ஒரு நாளைக்கு 10,000 ட்விட்களையும்,  வெரிபை செய்யாத பயனர்கள் 1000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும்.  புதிய யூசர்களுக்கு 500 ட்விட் மட்டுமே பார்க்க முடியும்.   டேட்டா ஸ்கிராப்பிங்கை தடுப்பதற்காக தற்காலிகமாக இந்த கட்டுப்பாடு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 


நேற்று இது குறித்து முதலில் வெளியிட்ட அறிக்கையில்   வெரிபைட் பயனர்கள் ஒரு நாளைக்கு 6,000 ட்விட்களையும்,   வெரிபை செய்யாத பயனர்கள் 600 ட்விட்களையும், புதிய யூசர்களுக்கு 300 ட்விட்களை  மட்டுமே பார்க்க முடியும் எனக் கூறினார். பின்னர் இதனை  வெரிபைட் பயனர்கள்  ஒரு நாளைக்கு 8,000 ட்விட்களும்,  வெரிபை செய்யாத பயனர்கள் 800 ட்விட்களையும்,   புதிதாக இணையும் புதிய யூசர்களுக்கு 400 ட்விட்களையும்  மட்டுமே பார்க்க முடியும் எனத் தெரிவித்தார். தற்போது இதனை  10000 , 1000, 500 என்ற அளவிற்கு உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

ட்விட்டர்

 டேட்டாக்களை அளவின்றி பார்த்துவிட்டு அதனை மற்ற இடங்களில் எடுத்து பயன்படுத்துகிறார்கள்.   இந்த டேட்டா ஸ்கிராப்பிங்கை தடுப்பதற்காக தற்காலிகமாக இந்த கட்டுப்பாடு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.  குறிப்பாக AI நிறுவனங்கள் தங்கள் மாடல்களைப் பயிற்றுவிக்க ட்விட்டரை பயன்படுத்துவதை எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.  அதேபோல் இனி ட்விட்களைப் பார்க்க பயனர்கள் ட்விட்டர் தளத்தில் கணக்கு வைத்திருக்க வேண்டும் என ட்விட்டர் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதற்கு முன் கணக்கு இல்லை என்றாலும் ட்விட் லிங்க் இருந்தாலே அதை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web