சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகள்!! ஜூன் 1 முதல் அமல்!!

 
ஐசிசி

சர்வதேச  கிரிக்கெட் கவுன்சில் கிரிக்கெட் வீரர்களின் நலனைப் பேணிக் காக்கும் வகையிலும் ரசிகர்களுக்கு போட்டியின் சுவாரஸ்யத்தை அதிகரித்து காட்டவும் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நடைமுறைப்படி கிரிக்கெட் போட்டிகளின் விதிமுறைகள் பேட்ஸ்மேனுக்கு சாதகமாகவே இருக்கும். அந்த வகையில், 3 புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. 
அதன்படி, சந்தேகத்தினை ஏற்படுத்தும்  கேட்ச், ரன்-அவுட் இது குறித்து  களத்தில் இருக்கும்  நடுவர்கள், மூன்றாவது அம்பயர் அல்லது டிவி அம்பயர்  ஏதாவது பரிந்துரை செய்யும் போது தங்கள் முடிவை சுதந்திரமாக அறிவிக்கலாம். இனி சாஃப்ட் சிக்னல் வழங்க வேண்டியதில்லை. அதே போல்  ஃப்ரீ ஹிட்டில் ஸ்டம்பில் பட்டால் அந்த ரன்கள் இனி பேட்ஸ்மேன் கணக்கிலேயே சேர்க்கப்படும். கடந்த டி20 உலகக்கோப்பையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், முகமது நவாஸ் வீசிய ஃப்ரீ ஹிட் பந்து ஸ்டம்ப்பில் பட்ட போதும் விராட்கோஹ்லி ஓடியே 3 ரன்கள் எடுத்தார். இனி  ஃப்ரீ ஹிட் முறையில் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக  விதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தியா
வீரர்கள் வேகப்பந்து வீச்சை எதிர்க்கொள்ளும் போது பேட்ஸ்மேனும், ஸ்டம்புக்கு அருகில் நிற்கும் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுக்கு அருகில் நிற்க வைக்கப்படும் பீல்டர்களும் ஹெல்மட்டை அணிய வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த புதிய விதிமுறைகள் வரும் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஐசிசி அறிவித்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web