ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம்!
Updated: Feb 1, 2026, 15:27 IST
ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த சட்டம் வரி செலுத்தும் முறையை மேலும் தெளிவாகவும் கடுமையாகவும் மாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

வருமான வரி தாக்கலில் பொய் கணக்குகளை காட்டினால் 100 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும். வரி மறைப்பு மற்றும் தவறான தகவல் அளிப்பதை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், வரி தொடர்பான சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனை இல்லை. அத்தகைய குற்றங்களுக்கு அபராதம் மட்டும் விதிக்கப்படும் எனவும் நிதியமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
