டாரஸ் லாரிகளுக்கு புதிய நேர கட்டுப்பாடு!

 
taraus

குமரி மாவட்டத்தில் தொடர் விபத்துகள் அதிகரித்ததை தொடர்ந்து, டாரஸ் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இனி இரவு 10 மணிக்கு பிறகே இவ்வாகனங்கள் மாவட்டத்துக்குள் நுழைய வேண்டும் என எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளார்.  

ஏற்கனவே காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரையும் கனரக வாகனங்களுக்கு தடை உள்ளது. ஆனால் இந்த தடையை மீறி வாகனங்கள் நுழைந்ததால் விபத்துகள் அதிகரித்தன. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் டாரஸ் லாரிகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன.

இதனை தடுக்கும் வகையில், இனி இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மட்டுமே டாரஸ் லாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்த சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன் நுழையும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!