ஜூன் 12 முதல் தமிழகத்தில் புதிய சுங்கச்சாவடி... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

 
சுங்கச்சாவடி
தமிழகத்தில் ஜூன் 12ம் தேதி முதல் புதிதாக இன்னொரு சுங்கச்சாவடி அமலுக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் ஏற்கனவே மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிக சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருவதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கும்பகோணம் அருகே மானம்பாடி என்ற இடத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடி ஜூன் 12 முதல்  செயல்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.  

வாகன ஓட்டிகள் அதிர்ச்சி... ஜூன் 12 முதல் தஞ்சை விக்கிரவாண்டி சாலையில்  புதிய சுங்கச்சாவடி!  

தஞ்சாவூர் - கும்பகோணம் - விக்கிரவாண்டி இடையே புதிதாக அமைக்கப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சாவூர் அருகே வேம்புக்குடி என்ற இடத்தில் ஏற்கனவே சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. 
இந்நிலையில் வேம்புக்குடி என்ற இடத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் மானம்பாடி என்ற இடத்தில் மேலும் ஒரு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. 50 கிலோ மீட்டர் இடைவெளியில் 2 சுங்கச்சாவடிகள் அமையப் பெற்றுள்ளது. 

சுங்கச்சாவடி

மானம்பாடி என்ற இடத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் கட்டண விபரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.. தஞ்சை விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சுங்கச்சாவடியில் கார்  போன்ற இலகுரக வாகனங்கள் ஒரு முறை பயணிக்க ரூ.105 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது