வைரல் வீடியோ... புதுவிதமான கேம் விளையாடிய சச்சின்-பில்கேட்ஸ்!

 
 சச்சின்-பில்கேட்ஸ்

உலகப்பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ்  இந்தியா வந்துள்ள  நிலையில்  சச்சின் டெண்டுல்கருடன் சேர்ந்து வட பாவ் சாப்பிடுகிறார். இது குறித்த வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவலாக வைரலானது.  இந்த வீடியோவின் இறுதியில் “செர்விங் சூன்” என குறிப்பிட்டிருந்தது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இது ரசிகர்களில் மேலும் ஆவலையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியது.


இதுகுறித்து  தற்போது  வெளியான மற்றொரு வீடியோவில், சச்சின் மற்றும் பில்கேட்ஸ் “க்ரெனிஸ்” எனும் தனித்துவமான விளையாட்டில் கலந்து கொண்டனர்.  இது கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் இரண்டையும் கலந்த ஒரு விளையாட்டாகும். பில்கேட்ஸ் டென்னிஸ் பந்து சர்வ் செய்ய தயாராகும் போது, சச்சின் கிரிக்கெட் பேட் போல் ஸ்டான்ஸ் எடுத்த காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. “நாம் டென்னிஸ் விளையாடுறோம்னு நினைச்சேன்…” என கேட்ஸின் கூற , “பில், நானா சொன்னது ‘க்ரெனிஸ்’ – கொஞ்சம் கிரிக்கெட், கொஞ்சம் டென்னிஸ்!” என சச்சின் பதிலளித்துள்ளார்.  
இந்த எல்லா வீடியோக்களும், சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை மற்றும் பில்கேட்ஸ் அறக்கட்டளையின் கூட்டிணைப்பு அறிவிப்புக்கான முன்னோட்டமாக அமைந்தது. இருவரும் மாறிக்கொண்ட ஜெர்ஸிகளுடன் வந்துள்ள வீடியோவின் மூலம், இவை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டன. இந்த ஒப்பந்தம் குழந்தைகளின் முழுமையான வளர்ச்சி, சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து மற்றும் கிராமப்புற வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது. .

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web