மக்களே உஷார்... தமிழகத்தின் 4 நகரங்களில் புதிய வகை கொரோனா பரவல்...!

 
ஜே.என்.

இந்தியா  முழுவதும் கடந்த சில நாட்களாக ’JN1’  வகை வைரஸ் வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் பெரிய வகை பாதிப்புக்கள் இல்லை. இவைகளுக்கு தடுப்பூசி தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இருந்த போதிலும் மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை மறுபடியும் செயல்படுத்தியுள்ளன. முகக்கவசம் ,சமூக இடைவெளி, ஆர்டிபிசிஆர் பரிசோதனை என மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

கொரோனா

இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள்  தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளன.  தமிழகத்தை பொறுத்தவரை  கோவை, மதுரை, திருச்சி, திருவள்ளூர்  மாவட்டங்களில்   ’JN1’ வகை புதிய கொரோனா பாதிப்பு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் கோர தாண்டவத்தால்  லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த பாதிப்பில் இருந்து பொதுமக்கள் மீண்டு இயல்பு நிலைக்கு  திரும்பி உள்ளனர். இந்நிலையில் புதிய கொரோனா மறுபடியும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.   

கொரோனா
இந்நிலையில் தமிழகத்தில் கர்ப்பிணிகள்,  இணை நோய் காரணமாக சிகிச்சைக்கு வந்தவர்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.  அதில், 4 பேருக்கும் புதிய வகை கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அந்த 4 பேரும் மதுரை, திருச்சி, கோவை, திருவள்ளூர்  மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா வீரியம் குறைந்தது எனவும், மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web