இந்திய விமானப்படைக்கு புதிய துணைத் தளபதி!

 
விமானப் படை

இந்திய விமானப்படையின் துணைத் தளபதியாக இருந்த ஏர் மார்ஷல் நம்தேஷ்வர் திவாரி நேற்று முன்தினம் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து காலியான அந்த இடத்திற்கு புதிய துணைத் தளபதியை மத்திய அரசு அதிரடியாக நியமித்தது. அதன்படி தென்மேற்கு மண்டல தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் இந்தப் புதிய பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

புதிய துணைத் தளபதியாக நியமிக்கப்பட்ட நாகேஷ் கபூர் டெல்லியில் உள்ள வாயு பவனில் நேற்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு விமானப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். நாட்டின் வான் பாதுகாப்பு மற்றும் போர் வியூகங்களை வகுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த உயரிய பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டது ராணுவ வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.


 

கடந்த 1986-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் இணைந்த நாகேஷ் கபூர் மிக நீண்ட அனுபவம் கொண்டவர். பலவிதமான அதிநவீன போர் விமானங்களை வானில் இயக்கி சாதனை படைத்த அனுபவம் இவருக்கு உண்டு. சுமார் 38 ஆண்டுகால அனுபவமும் பல்வேறு சவாலான பணிகளைச் செய்த திறமையும் இவருக்கு இருப்பதால் விமானப்படையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!