ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பியவர் ... புதிய வீடியோ.!

சமீபத்தில் நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்து குறித்த புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜூன் 12ம் தேதி, ஏர் இந்தியா விமானம் பிற்பகல் 1:30 மணிக்குப் பிறகு அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, லண்டன் சர்வதேச விமான நிலையமான கேட்விக் நோக்கிச் செல்லவிருந்தது.
Another footage of Air India #planecrash survivor emerges pic.twitter.com/Z4gY39d9Yw
— Aryan (@chinchat09) June 16, 2025
இருப்பினும், புறப்பட்ட சில நிமிடங்களில், அது அருகிலுள்ள பிஜே மருத்துவக் கல்லூரி மற்றும் சிவில் மருத்துவமனையின் விடுதிக் கட்டிடத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒரே ஒரு நபர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், உயிர் பிழைத்த விஸ்வாஷ் குமார் ரமேஷ் என்பவர், விபத்து நடந்த இடத்திலிருந்து நடந்து செல்வதைக் காட்டுகிறது. அவர் பின்னணியில் புகை எழும்ப, அருகில் இருந்த சிலர் கூச்சலிடுவதைக் காணலாம்.
திடீரென்று, எரியும் இடிபாடுகளில் இருந்து ரமேஷ் வெளியே வருகிறார், அருகில் இருந்தவர்களில் ஒருவர் அவரைக் கண்டார். அந்த நபர் ரமேஷை நோக்கி நடந்து வந்து, அவரது கையைப் பிடித்து, அந்த இடத்திலிருந்து அழைத்துச் செல்கிறார். விபத்தில் சிக்கிய AI171 விமானத்தில் 11A இருக்கையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஸ்வாஷ் குமார் ரமேஷ் பிரிட்டிஷ் நாட்டவர் எனத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் விமான விபத்தில் பலியானவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. DNA சோதனை நடத்தப்பட்டு 87 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 47 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 242 பேர் பயணித்த விமானத்தில் 241 பேர் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. விமானம் ஹாஸ்டல் மீது விழுந்ததில் 33 பேர் மரணமடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!