புத்தாண்டு கொண்டாட்டம்... சென்னையில் பாதுகாப்புக்காக 19000 போலீசார் குவிப்பு!
2026 புத்தாண்டை பொதுமக்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட சென்னை பெருநகர காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பேரில், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சென்னை முழுவதும் காவல் துறை தயார் நிலையில் உள்ளது.

புத்தாண்டு நாளில் கடற்கரை, வழிபாட்டு தலங்கள், முக்கிய சாலைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையுடன், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதவி ஆணையாளர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் களத்தில் பணியாற்ற உள்ளனர்.

ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை உட்பட மொத்தம் 19,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். காவல்துறைக்கு துணையாக சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் பணியமர்த்தப்பட உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டம் சென்னையில் அமைதியாக நடைபெற காவல் துறை முழுமையாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
