ஜனநாயகப் போர்க்களத்தில் நம்பிக்கை ஒளி… 2026-க்கு முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து!
ஜனநாயகப் போர்க்களத்தில் வெற்றி ஒளிவீசும் நம்பிக்கை தரும் புத்தாண்டாக 2026 மலர்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) December 31, 2025
ஒரு கையில் வாளேந்தி உரிமை காத்தும், மறு கையில் கேடயமேந்தி மக்கள் நலன் காத்தும், ஜனநாயகப் போர்க்களத்தில் நிற்கும் நமக்கு வெற்றி ஒளிவீசும் நம்பிக்கை தரும்… pic.twitter.com/498ShcmXwt
உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளுக்கும், அனைத்து மக்களுக்கும் உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று முதல்வர் கூறினார். ஒரு கையில் வாளேந்தி உரிமைகளை காக்கும் நாமும், மறு கையில் கேடயமேந்தி மக்கள் நலனை காக்கும் நாமும், ஜனநாயகப் போர்க்களத்தில் நிற்கிறோம் என்றார்.
புத்தாண்டு தொடக்கம் முதலே ‘சமத்துவம் பொங்கட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ எனக் கோலமிட்டு திராவிடப் பொங்கல் களைகட்டட்டும் என்றார். விளையாட்டு, கலை, இலக்கிய நிகழ்வுகளுடன் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்கான தொடக்கமாக இந்தப் புத்தாண்டை கொண்டாடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
