நியூ இயர் கொண்டாட்டங்கள்... பூக்கள் விலை எகிறியது... மல்லிகை கிலோ ரூ.3,000க்கு விற்பனை!
உலகம் முழுவதும் இன்று முதலே புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைக்கட்ட துவங்கியுள்ள நிலையில், மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. குறிப்பாக மல்லிகைப் பூவின் விலை கிலோ 3,000 ரூபாய்க்கு விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைக்கட்ட துவங்கியிருப்பதால் கிறிஸ்துவ தேவாலயங்களை அலங்கரிக்கவும், வீடுகளில் இறை வழிபாட்டிற்காகவும் பூக்களின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஹோட்டல்களிலும், பொதுநிகழ்ச்சிகளிலும், பார்ட்டிகளிலும் பூக்களைக் கொண்டு அலங்கரிக்கின்றனர். அதே சமயம் தற்போது நிலவும் பனிப்பொழிவு காரணமாகப் பூக்களின் வரத்து குறைந்துள்ளதும் இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. மல்லிகைப்பூ: கிலோ ரூ.3,000, கனகாம்பரம்: கிலோ ரூ.1,500, பிச்சி மற்றும் முல்லை: கிலோ ரூ.1,200 என விற்பனையானது.

விலை அதிகமாக இருந்தாலும், பண்டிகை காலம் என்பதால் பூக்களை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் அலைமோதியது. பூக்கள் மட்டுமின்றி, புத்தாடைகள் மற்றும் இனிப்பு வகைகளின் விற்பனையும் மதுரையில் உச்சத்தை எட்டியுள்ளது.

வியாபாரிகளின் கருத்துப்படி, பனிப்பொழிவு இன்னும் சில நாட்களுக்கு நீடித்தால் பூக்களின் விலை குறைய வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. இது வரவிருக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வரை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
