புதுமனைப் புகுவிழா... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மின்சாரம் தாக்கி பலியான சோகம்!

 
மின்சாரம்

வருட கணக்கில் பணம் சேர்த்து வைத்து, ஆசையாசையாய் மாத கணக்கில் கூடவே இருந்து, தங்களுக்குப் பிடிச்ச மாதிரி வீடு கட்டி, கிரஹபிரவேசத்திற்கு நாள் குறித்து, நண்பர்கள், உறவினர்களுக்கு எல்லாம் சொல்லி கொண்டாட துவங்கியது அந்த குடும்பத்தினரின் மனசு. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில், வீடு கிரக பிரவேசத்திற்காக வீட்டின் முன்பாக போடப்பட்டிருந்த பந்தல் காற்றில் விழுந்த நிலையில், எதிர்பாராமல் மின்சாரம் தாக்கியதில், அந்த குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மின்சாரம்

ஆந்திர மாநிலம் பெத்ததிப்ப சமுத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது வீட்டு கிரகபிரவேசத்தில் இப்படி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில், கிரக பிரவேசத்திற்கு வந்திருந்த  மேலும் மூவர் பலத்த காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிடிஎம் மண்டலத்தின் கனுக மகுலபல்லேயில் உள்ள கொண்டா கிருஷ்ணாரெட்டி புதியதாக கட்டப்பட்ட வீட்டிற்கு நேற்று கிரகப்பிரவேசம் நடைபெற்றது. கிரகப்பிரவேசத்திற்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக உணவு பரிமாறுவதற்காக வீட்டின் வெளிபுறத்தில் பந்தல் அமைத்திருந்தார். பந்தலுக்குள் மேஜைகள் போட்டு, வந்திருந்த நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் உணவு பரிமாறப்பட்டது. இந்நிலையில் அனைவரும் மகிழ்ச்சியுடன் உணவு அருந்தி கொண்டிருந்த போது திடீரென  காற்று வீசியதில் பந்தல் அமைக்க போடப்பட்டிருந்த இரும்பு கம்பி அருகில் இருந்த 11 கே வி மின் கம்பத்தின் மீது விழுந்தது.  இதில் பந்தலின் கீழ் அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்த சின்ன லக்ஷ்மம்மா (80), அவரது பேரன் விஜய பிரசாந்த் (27) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஒருவர் பலி

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடுகுலவாரிப்பள்ளியை சேர்ந்த சாந்தகுமாரி (40) லட்சுமணகுமார் (45) பெங்களூரு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  உயிரிழந்தனர். சுப்பம்மா (75), சுனிதா (40), சுதாகர் (48) ஆகியோரின் உடல் நிலை கவலைக்கிடமானதால்  முதலில் மதனப்பள்ளி மாவட்ட மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூர்  மருத்துவமனைக்கும் அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதனப்பள்ளி டிஎஸ்பி கே.கேசப்பா சம்பவ இடத்தை பார்வையிட்டு விபத்துக்கான காரணம் குறித்து  போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web