நியூசிலாந்து வர்த்தகத்துறை அமைச்சர் ராஜினாமா!

நியூசிலாந்தில் நியூசிலாந்து தேசியவாத கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு வர்த்தகத் துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் ஆண்ட்ரூ பேலி . இவருக்கு வயது 63. கடந்த அக்டோபர் மாதம் தலைநகர் வெலிங்டனில் வணிகர்களுக்கான மாநாடு ஒன்று நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்ட ஆண்ட்ரூ பேலி வணிகர்களுடன் உரையாடினார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு நபருடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டு விட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆண்ட்ரூ அந்த நபரை அவதூறாக விமர்சனம் செய்தார். அவரது இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.
இதற்கு அவர் பகிரங்க மன்னிப்பு கோரினார். எனினும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அவரை விமர்சித்து வந்தன. இந்நிலையில் ஆண்ட்ரூ பேலி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அதேசமயம் எம்.பி.யாக அவர் தொடர்வார் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!