டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு பின்னடைவு… ஆடம் மில்னே விலகல்!
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஆடம் மில்னே காயம் காரணமாக விலகியுள்ளார். இந்த தொடர் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறுகிறது. முக்கிய கட்டத்தில் மில்னே விலகியது நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
Wishing Adam all the best for his recovery 🖤
— BLACKCAPS (@BLACKCAPS) January 23, 2026
Full story at https://t.co/3YsfR1Y3Sm or the NZC app 📲 #T20WorldCup pic.twitter.com/AGvd4HKFRe
உலகக் கோப்பைக்கு முன்பாக இந்தியா – நியூசிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரை உலகக் கோப்பை தயாரிப்புக்கான முக்கிய வாய்ப்பாக இரு அணிகளும் பயன்படுத்தி வருகின்றன. முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி இன்று நடைபெறுகிறது.
மில்னே விலகியதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக வேகப் பந்துவீச்சாளர் கைல் ஜேமிசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. முன்னதாக ஜேமிசன் ரிசர்வ் வீரராக இருந்த நிலையில், தற்போது நேரடியாக உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
