பகீர்... புதிதாகப் பிறந்த பெண் சிசு கால்வாயில் வீசப்பட்டு கொலை !

 
குழந்தை
 


 
வேலூர் பென்ட்லென்ட் அரசு மருத்துவமனை அருகேயுள்ள கழிவுநீர் கால்வாயில் புதிதாக பிறந்த பெண் சிசு ஒன்று இறந்த நிலையில் மிதந்து கிடந்தது நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. காலை நேரத்தில் அங்கு சென்ற பொதுமக்கள் சிசுவின் உடலைக் கண்டு உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ்

முதற்கட்ட விசாரணையில் குழந்தை நேற்று தான் பிறந்திருக்கலாம் என தெரிகிறது. அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் பிரசவமா? அல்லது வேறு இடத்தில் பிறந்த குழந்தையை இருளடிக்க இங்கே கொண்டு வந்து வீசியதா? கள்ளக்காதலில் பிறந்த குழந்தை என்பதாலா கொலை செய்யப்பட்டதா? பெண் குழந்தை என்பதால் இதுபோன்ற துயர சம்பவம் நடந்ததா? என்ற சந்தேகங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ்

கால்வாய் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. குழந்தையை வீசி சென்றவர்களின் அடையாளத்தைத் தெரியப்படுத்தும் பணியில் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் கண்டீபன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!