'பிறந்த குழந்தை விற்பனைக்குத் தயார்...' பிரசவம் முடிந்ததும் ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்ட தாய்!
பிரசவித்த சில மணி நேரத்திலேயே, 'பிறந்த குழந்தை விற்பனைக்குத் தயார்...' என்று ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டு, பிறந்த குழந்தையை ஆன்லைனில் விற்க போஸ்ட் போட்டு முயன்ற தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஜூனிபர் பிரைசன் எனும் இளம்பெண், தனக்கு குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே குழந்தையை விற்பது தொடர்பான பதிவை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
குழந்தையை தத்தெடுக்க ஆர்வமுள்ளவர்களுக்காக ஆன்லைன் குழுக்களிலும் வாட்ஸ்அப்பிலும் இது குறித்த செய்திகளைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, ஓரினச்சேர்க்கையாளர்கள் உட்பட பலர் குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்து வந்தனர்.
இருப்பினும் அந்த இளம்பெண்ணின் முகநூல் பதிவில் குழந்தையை பணத்திற்காக விற்றதாக குறிப்பிடப்படவில்லை. குழந்தையை தன்னால் வளர்க்க முடியாது என்று கருதிய ஜூனிபர் குழந்தையை விற்க முயன்றதாக கூறப்படுகிறது. அவர் குழந்தையின் புகைப்படத்தையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
'பிறந்த குழந்தைக்கு அதன் தாய் வளர்ப்பு பெற்றோரைத் தேடுகிறார்' என்று விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கைகளின்படி, இந்த இடுகையைப் பார்த்ததும் ஒரு குடும்பம் ஜூனிபரை அணுகியது. அந்த குடும்பத்தினர் ஜூனிபரை தொடர்பு கொண்டபோது, குழந்தைக்கு ஈடாக பணம் கேட்டுள்ளார்.
போலீசார் இது குறித்து கூறுகையில், அந்தப் பெண் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வேலைக்குச் செல்வதற்காக பணத்தைக் கோரியதாக கூறப்பட்டது. இருப்பினும் பணத் தேவையைப் பற்றி அறிந்ததும் அந்த குடும்பத்தினர் உடனடியாக தங்கள் ஆர்வத்தை விலக்கிக் கொண்டு வெளியேறி உள்ளனர். ஜூனிபரைக் கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகிறோம் என்றனர்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
