காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், காதலித்துத் திருமணம் செய்து கொண்ட மூன்று மாதங்களிலேயே புதுப்பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு ஆந்திரஹள்ளியில் உள்ள காமிகன்யா நகரைச் சேர்ந்த அபிஷேக் என்பவரும், அமுல்யா (23) என்ற பெண்ணும் சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீடுகளிலும் எதிர்ப்பு இருந்ததால், பெற்றோர் எதிர்ப்பையும் மீறி இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு, காமிகன்யா நகரில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அமுல்யா திடீரெனத் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து பேடரஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அமுல்யாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, அமுல்யாவின் பெற்றோர் தனது மகள் சாவுக்கு அபிஷேக் தான் காரணம் என்று குற்றம் சாட்டி, பேடரஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
