37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் நியூசிலாந்து சாதனை!
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவை 2–1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம், 37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து அணி சாதனை படைத்துள்ளது.
இந்த தொடரில் 352 ரன்கள் குவித்த நியூசிலாந்தின் டேரில் மிட்செல் தொடர் நாயகன் விருதை வென்றார். இதனையடுத்து, சர்வதேச ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் விராட் கோலியை (795 புள்ளிகள்) பின்னுக்குத் தள்ளி மிட்செல் (845 புள்ளிகள்) முதலிடத்தை பிடித்துள்ளார்.
மேலும், இந்திய வீரர் ரோஹித் சர்மாவும் மூன்றாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டார், மூன்றாவது இடத்தை ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் சத்ரான் பிடித்துள்ளார். மற்ற இந்திய வீரர்கள்: ஷுப்மன் கில் – 5வது, கே.எல். ராகுல் – 10வது, ஷ்ரேயாஸ் ஐயர் – 11வது இடங்களில் உள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
