அடுத்த அதிரடி... அமெரிக்க பொருட்களுக்கு வரியை 84% ஆக உயர்த்தினார் சீன அதிபர் ஜின்பிங்!

 
சீனா

சீனா மீதான வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 104% ஆக உயர்த்​திய நிலை​யில், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை அதிபர் ஜி ஜின்​பிங் 84% ஆக உயர்த்தி உள்​ளார். 

சீனா மீது 104% வரி விதித்தது அமெரிக்கா

சீன பொருட்​களுக்​கான பரஸ்பர வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த 2-ம் தேதி 34% ஆக அறிவித்தார். இதற்கு பதிலடி​யாக அமெரிக்​க பொருட்​களுக்​கும் 34% வரி விதிக்​கப்​படும் என சீனா அறி​வித்​தது.

இந்​நிலை​யில், சீன பொருட்​களுக்​கான வரியை 104% ஆக அமெரிக்கா நேற்று முன்​தினம் உயர்த்​தி​யது. இதற்கு பதிலடி​யாக அனைத்து அமெரிக்க பொருட்​களுக்​கான வரி இன்று முதல் 84% ஆக உயர்த்​தப்​படும் என சீன நிதி​யமைச்​சகம் நேற்று அறி​வித்​தது.

இந்நிலையில் குடியரசு கட்​சி​யின் நாடாளு​மன்ற குழு கூட்​டத்​தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேசும்​போது, “குடியரசு கட்​சி​யின் சில கிளர்ச்​சி​யாளர்​கள், பரஸ்பர வரி தொடர்​பாக உலக நாடு​களு​டன் நாடாளுமன்ற குழு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறுகின்றனர். என்​னைப் போல உங்​களால் பேரம் பேச முடி​யாது.

அமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்!! சீனா பகிரங்க எச்சரிக்கை!!

சில நாடு​கள் எந்த அளவுக்​கும் பணிந்து செல்ல தயா​ராக உள்​ளன. நீங்​கள் என்ன சொன்​னாலும் செய்ய தயா​ராக இருக்​கிறோம், வரி தொடர்​பாக தயவு செய்து ஒப்​பந்​தம் செய்து கொள்ள முன்​வாருங்​கள் என என்​னிடம்​ கெஞ்​சுகின்​றனர்​” என்​றார்​.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web