அடுத்தடுத்து அதிர்ச்சி... முன்னாள் திமுக அமைச்சர் உபயதுல்லா திடீர் மரணம்!

 
உபயதுல்லா

நடிகர் மயில்சாமியின் திடீர் மரணம் ரசிகர்களையும், திரையுலகின்ரையும் அதிர்ச்சியடைய செய்த நிலையில், அடுத்த அதிர்ச்சியாக திமுகவின் முன்னாள் அமைச்சரும், திமுக மாநில  வர்த்தக அணித் தலைவருமான எஸ்.என்.எம்.உபயதுல்லா உடல் நலக்குறைவால் காலமானார்.

தஞ்சாவூர் தொகுதியில் இருந்து 4 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்ட உபயதுல்லா, வணிக வரித்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது திமுக வர்த்த அணி தலைவராகவும், தலைமை செயற்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வந்தார். தஞ்சாவூர் மாவட்ட திமுகவில் முக்கிய தலைவராக விளங்கினார்.

உபயதுல்லா

2022ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் அண்ணாதுரை விருது உபயதுல்லாவுக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஏராளமான திமுகவினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்துகின்றனர்.

உபயதுல்லா

முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா மறைவைத் தொடர்ந்து முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் மூத்த அமைச்சர்கள் பலரும் தஞ்சாவூர் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர்கள் பலரும் ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web