ஜம்மு-காஷ்மீரில் அடுத்த அதிர்ச்சி... 700 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 3 வீரர்கள் உயிரிழப்பு!

 
ராணுவ வாகனம் கவிழ்ந்து 3 வீரர்கள்
 

ஜம்மு-காஷ்மீரில் 700 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 3 வீரர்கள் பரிதாபமாக பலியானார்கள்.
ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் வீரர்களை ஏற்றிச் சென்ற ராணுவ வாகனம் சாலையை விட்டு விலகி 700 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் 3 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இன்று காலை 11.30 மணியளவில் பட்ரேரி சாஷ்மா அருகே விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராணுவம், காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் இணைந்து உடனடியாக மீட்புப் பணியைத் தொடங்கினர். விபத்து நடந்த இடத்திலிருந்து 3 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

ராணுவ வாகனம் கவிழ்ந்து 3 வீரர்கள்

பலியானவர்கள் அமித் குமார், சுஜீத் குமார் மற்றும் மன் பகதூர் என அடையாளம் காணப்பட்டனர். வாகனம் விழுந்ததில் முற்றிலும் சேதமடைந்து காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?