அடுத்தடுத்து அதிர்ச்சி... சிக்கன் பிரியாணியில பூரான்.. இன்னும் எத்தனை உயிரை காவு வாங்குவாங்களோ... அடாவடி உணவகங்கள்!

விஷயத்தைக் கேள்விபட்டதில் இருந்து, இன்னும் எத்தனை பேர் உயிரை காவு வாங்குவாங்களோ என்று தான் புலம்ப தோன்றுகிறது. கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு இளம்பெண் உயிரிழந்த நிலையில், அடுத்தடுத்து அந்த ஷவர்மாக்களில் கெட்டுப் போன சிக்கனை திறமையாக திணிக்கிற தமிழக உணவகங்களும் சிக்கின. வேலூரில், ஆம்பூரில் என்று அடுத்தடுத்து தமிழகத்திலும் ஆயிரக்கணக்கான கிலோ எடைகளில் கெட்டுப் போன இறைச்சிகளைக் கைப்பற்றினார்கள். அதன் பிறகு எல்லாம் சுமூகம். தமிழக உணவக முதலாளிகள் திருந்தி விட்டதாய் அதிகாரிகள் மீண்டும் ஓய்வெடுக்க, இப்போது மீண்டும் பல இடங்களில் கெட்டு போன இறைச்சிகள் பரிமாறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரியாணியில் எலி தலை இருந்தது. அதன் பின்னர், சென்னையில் சிக்கன் பிரியாணிகளில் கலப்பதற்காக பூனைகளை வேட்டியாடிய கும்பலை போலீசார் பிடித்தனர். பூனை கறிகளை உணவகங்களுக்கு சப்ளை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இப்போது பிரியாணியில் எலி, பூனை, கரப்பான்பூச்சி, புழுக்களுக்கு அப்புறமாக பூரான் இருந்திருப்பது அதிர வைத்துள்ளது.
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் உள்ள ஒரு கடையில் வாடிக்கையாளர் ஒருவர் பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளார். அதில் ஒரு பூரான் இறந்து கிடந்துள்ளது. பிரியாணியில் கருப்பு நிறத்தில் பூராண் இறந்து கிடந்துள்ளது. இது குறித்து அவர் கடைக்காரரிடம் கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்படுகிறது. அவர் கிட்டதட்ட பிரியாணியை சாப்பிட்டு முடித்த பிறகு தான் பூரான் கிடப்பது தெரியவந்தது.
கடையில் ஒருவர் பிரியாணி எனவே உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் சாத்தான்குளம் பகுதி ஹோட்டல் மற்றும் உணவு சார்ந்த கடைகளில் ஆய்வு நடத்திட வேண்டும். உணவு பாதுகாப்பு இல்லாமலும், ஹோட்டல்கள் சுகாதாரம் குறைவாக இருந்தால் அவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க