அனில் அம்பானி நிறுவன கணக்குகள் முடக்கம்!

 
அனில் அம்பானி
 

அனில் அம்பானியின் ஆர்-இன்ஃப்ரா நிறுவனம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுமான நிதியை மோசடி செய்து வெளிநாட்டுக்கு அனுப்பியதாக பெரிய சர்ச்சை வெடித்துள்ளது. போலி நிறுவனங்களுக்கு துணை ஒப்பந்தம் வழங்கியதாக கூறி நிதி மாற்றம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறை அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளது.

விசாரணையின் தாக்கமாக ஆர்-இன்ஃப்ரா நிறுவனத்துக்கு சொந்தமான 13 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த கணக்குகளில் இருந்த ரூ.54.82 கோடி தற்காலிகமாக முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. நிதி தரப்பில் இது பெரிய அதிர்ச்சியாகக் கருதப்படுகிறது.

இந்த வழக்கில் கடந்த மாதமே அனில் அம்பானிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் பக்கம் என்ன பதில் வருகிறது என்பதில் இப்போது கவனம் திரும்பியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!