நீலகரியில் மைனஸ் 3 வெப்பநிலை… பனியில் உறைந்த புல்வெளிகள்!

 
நீலகிரி
 

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் கடந்த சில தினங்களாக உறை பனி கடுமையாக நிலவி வருகிறது. கோரகுந்தா பகுதியில் புல்வெளிகள் அதிகம் உள்ள நிலையில், நேற்று காலை பெய்த உறை பனி புல்வெளிகளை உப்பு கொட்டியதுபோல் வெள்ளை நிறத்தில் மாற்றியது. இயற்கை அழகுடன் கூடிய இந்த காட்சி, கடும் குளிரையும் சேர்த்தே கொண்டு வந்துள்ளது.

நீலகிரி

காலை நேரங்களில் மைனஸ் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகிறது. மஞ்சூர், குந்தா பகுதிகளில் மாலை 3 மணிக்கே பனி விழத் தொடங்கி, மறுநாள் காலை 9 மணி வரை நீடிக்கிறது. இதனால் பகுதி முழுவதும் கடும் குளிர் சூழ்ந்துள்ளது.

நீலகிரி

இந்த குளிரால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் உள்பட பலருக்கும் முகம், உதடுகள், கை, கால்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. சளி, காய்ச்சல் போன்ற தொல்லைகளாலும் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனைத் தவிர்க்க சூடு தரும் வெம்மையாடைகளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!