ஆட்டுக் கறி சாப்பிட்ட 19 பேருக்கு வாந்தி , மயக்கம்... மருத்துவமனையில் அனுமதி....

 
hospital
 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பனம்பாக்கத்தைச் சேர்ந்த வேல்முருகன் மேஸ்திரி தலைமையில் சுமார் 25 கூலி தொழிலாளர்கள், கடந்த அக்டோபர் மாதம் காட்டுக்கோட்டை பகுதியில் வேலைக்காக வந்து தங்கி வந்தனர். வடசென்னிமலை முருகன் கோயில் அடிவாரத்தில் வாடகை வீட்டில் அனைவரும் ஒன்றாக தங்கி சமைத்து சாப்பிட்டு வந்தனர். நேற்று முன்தினம், சதாசிவபுரம் பகுதியில் மரவள்ளிக் கிழங்கு அறுவடையில் ஈடுபட்டிருந்தபோது, அருகிலுள்ள தோட்டத்தில் மயங்கி கிடந்த ஆட்டை சுத்தம் செய்து அவர்களிடம் சமைக்கக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ்

அந்த ஆட்டுக் கறியுடன் கோழிக்கறியும் சேர்த்து சமைத்து சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் குழந்தைகள் உள்பட 19 பேருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுவலி ஏற்பட்டது. முதலில் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உடல்நிலை மோசமானதால் அனைவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீஸ்

சம்பவம் குறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்தனர். தொழிலாளர்கள் சமைத்த கறி குழம்பு மற்றும் அப்பகுதி குடிநீர் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதி முழுவதும் குளோரின் பவுடர் தெளிக்கப்பட்டது. உணவு விஷமாதா அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!