மேற்கு வங்கத்தில் நிபா பரவல்... 5 பேருக்கு தொற்று, 120க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தல்!
மேற்கு வங்காளத்தில் கடந்த சில நாட்களாக நிபா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று உறுதியான 2 நர்சுகள் கடந்த திங்கட்கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நிலைமை மோசமடைந்ததால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர்.

அவர்களில் ஆண் நர்ஸ் ஒருவர் புர்பா மேதினிப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர். பெண் நர்ஸ் புர்பா பர்தமான் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இதுதவிர, ஒரு டாக்டர், ஒரு நர்ஸ் மற்றும் ஒரு சுகாதார ஊழியர் என மேலும் 3 பேருக்கு இன்று தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சூழ்நிலையில், தொற்று பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 120 பேருக்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தி அரசு வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது. பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
