விஜய் மல்லையா – நீரவ் மோடி... இந்தியாவை கேலி செய்து கொண்டாட்டம்... சர்ச்சை வீடியோ!

 
நீரவ் மோடி விஜய் மல்லையா

சில ஆண்டுகளாக பண மோசடி வழக்குகளில் சிக்கி வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி, லண்டனில் 70வது பிறந்தநாள் விருந்து ஒன்றில் கலந்து கொண்டது வீடியோவாக பதிவாகி வைரலானது. இந்த வீடியோவில் நீரவ் மோடி, “நாங்கள் இருவரும் இந்தியாவிலிருந்து தப்பி ஓடியவர்கள்” என கூறியுள்ளார்.

வீடியோவின் தலைப்பில் “இந்தியாவில் மீண்டும் இணையத்தை அதிர வைப்போம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், என் நண்பரே விஜய் மல்லையா. உங்களை நேசிக்கிறேன்” என்று பகிர்ந்துள்ளார். இதையடுத்து, மல்லையா சிரித்துக் கொண்டு தன் அன்பை வெளிப்படுத்தியார். மோடியின் பேச்சில், இந்திய அரசுக்கு அவர் “மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றும், “அவர்களிடம் நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நீரவ் மோடி விஜய் மல்லையா

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. வெளியுறவு அமைச்சகம் கடும் ஆட்சேபனையை தெரிவித்தது. அவர்களை இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்துவருவதாகவும், சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேசிவருவதாகவும் கூறியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!