வரலாறு படைக்கிறார் நிர்மலா சீதாராமன்.. பிப்1. ஞாயிற்றுக்கிழமை மத்திய பட்ஜெட் தாக்கல்- நாடாளுமன்றக் குழு பரிந்துரை!
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 28-ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 1ம் தேதி வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், அன்று வார விடுமுறை என்பதால் எழுந்த குழப்பங்களுக்கு இப்போது விடை கிடைத்துள்ளது.
பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் குரு ரவிதாஸ் ஜெயந்தி என இரண்டு காரணங்கள் இருந்தாலும், அன்று காலை 11 மணிக்கு பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதன் மூலம், இந்தியாவின் நிதி வரலாற்றில் தொடர்ச்சியாக 9 மத்திய பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுவார். இவர் ஏற்கனவே மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடித்தது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பங்குச் சந்தைகள் மற்றும் வங்கிகளுக்கு விடுமுறை என்றாலும், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில் பங்குச் சந்தைகள் சிறப்பு வர்த்தகத்திற்காகத் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு பட்ஜெட் அறிவிப்புகளை உடனுக்குடன் பிரதிபலிக்க உதவும்.

பட்ஜெட்டிற்கு முன்னதாக, அதாவது ஜனவரி 31-ஆம் தேதி அல்லது ஜனவரி 30ம் தேதியே பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். 2026-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பில் (Income Tax Slab) மாற்றங்கள் மற்றும் நடுத்தர மக்களுக்கான சலுகைகள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் 'டிஜிட்டல் பட்ஜெட்' (Paperless Budget) முறையே இந்த ஆண்டும் தொடரும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
