"விஜய்யைப் பார்த்து திமுக பயப்படுகிறது” - நிர்மலா சீதாராமன்

 
நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது வருத்தமளிப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அதிவேக ரயில் திட்டங்கள், விவசாய மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் புதிய மருத்துவக் கட்டமைப்புகள் தமிழக மக்களுக்கும் நன்மை பயப்பவை அல்லவா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஆர்யத்திற்கும், திராவிடத்திற்கும் போர் நடப்பதாக முதல்வர் பேசியிருப்பது, பிரிவினைவாத மனநிலை கொண்டவர்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.

"மத்திய அரசு எப்போதுமே தமிழகத்தின் வளர்ச்சியை மனதில் கொண்டே செயல்படுகிறது; ஆனால் அரசியல் காரணங்களுக்காகத் திட்டமிட்டு வஞ்சிக்கப்படுவதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது" என அவர் விளக்கமளித்தார். நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வளர்ச்சி குறித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், திமுக-வை நேரடியாக விமர்சித்தார்:

விஜய் முதல்வர்

"விஜய்யின் அரசியல் வரவு மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வலுவடைந்து வருவதைப் பார்த்து திமுக அதிர்ச்சியில் உள்ளது. இந்தப் பயத்தின் காரணமாகவே அவர்கள் தற்போது பல இலவசங்களை அறிவித்து வருகிறார்கள்" என்றார். தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்குப் போதைப்பொருள் கலாசாரம் அதிகரித்துள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் அவர் சாடினார்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மெல்ல அழிந்து வருவதாகவும், தற்போது அது இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ளதாகவும் கூறினார். ஒருவேளை தவெக-வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தாலும், அது திமுக-வுக்குப் பெரிய மாற்றத்தைத் தந்துவிடப் போவதில்லை எனத் தெரிவித்தார்.

விஜய்யின் தவெக தற்போது தனது மூன்றாம் ஆண்டில் தடம் பதித்துள்ளது. இது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக, தவெக மற்றும் காங்கிரஸின் ஒரு பிரிவினர் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக அரசியல் வட்டாரங்களில் செய்திகள் கசிந்து வருகின்றன.

நிர்மலா சீதாராமனின் இந்தப் பேச்சு, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் திமுக-வுக்குக் கடுமையான சவாலை அளிக்கும் என்பதையே காட்டுகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!