அதிர்ச்சி!! நிர்வாண பூஜையை மொபைலில் படம் பிடித்து இளம்பெண்ணுக்கு மிரட்டல்!!

 
காமாட்சி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பொட்டிபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் செல்வராஜ். இவர் சிறுவயதில் இருந்து ஊர் மக்களுக்கு 'குறி' பார்த்து வருகிறார். ஏதேனும் சுப காரியத்திற்கு செல்வதற்கு முன்னர் இவரிடம் சென்று 'குறி' கேட்டுவிட்டு போனால் அக்காரியம் இவர் சொன்னதை போலவே நடக்கும் என்று ஊர் மக்கள் கூறுகிறார்கள். 

இந்நிலையில் இவரிடம் சில நாட்களுக்கு முன்னர் தேனியின் மஞ்சள்நாயகன் பட்டியை சேர்ந்த காமாட்சி(22) என்ற இளம்பெண் குறி கேட்க வந்திருக்கிறார். இவருடன் இவருடைய தோழியும் அவருடைய கணவர் என மொத்தமாக மூன்று பேர் சென்றனர். காமாட்சி தனது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனியாக வசித்துவருகிறார். 

எனவே கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக குறி கேட்க வந்திருக்கிறார். அவரிடம் எல்லா பிரச்சனையும் கேட்டுவிட்டு அடுத்தமுறை தனியாக வருமாறு செல்வராஜ் கூறியிருக்கிறார். அவர் கூறியப்படி இரண்டு நாட்களுக்கு முன்னர் காமாட்சி மட்டும் செல்வராஜின் வீட்டிற்கு சென்றுள்ளார். 

காமாட்சி

வீட்டில் வைத்து செல்வராஜ் மந்திரம் ஓதி யாகம் ஒன்றை வளர்க்கத் தொடங்கியிருக்கிறார். யாகம் முடிந்தவுடன் தாயத்து கயிறு கட்டவேண்டும், இதற்காக தனது தோட்டத்துக்கு செல்லவேண்டும் என காமாட்சியை அழைத்துச்சென்றுள்ளார். 

அங்கு போனவுடன் ஆடைகளை கழற்றச் சொல்லி செல்வராஜ் கட்டாயப்படுத்தியிருக்கிறார். இதற்கு காமாட்சி மறுப்பு தெரிவிக்கவே, இது எல்லாம் உன்னுடைய கணவருக்காகத்தான் என்று கூறியுள்ளார். அனைத்தையும் உண்மை என்று நம்பிய காமாட்சி ஆடைகளை அனைத்தையும் கழற்றி நிர்வாணமாகியுள்ளார். இப்போதுதான் செல்வராஜின் உண்மை முகம் வெளியில் தெரிந்திருக்கிறது.

அப்போது காமாட்சிக்கு தெரியாமலேயே அவரை நிர்வாணமாக தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனை கவனித்த காமாட்சி தடுக்க முயன்றபோது செல்வராஜ் காமாட்சியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறார். இதனையடுத்து காமாட்சி கூச்சலிட்டுள்ளார். எனவே செல்வராஜ் உடனடியாக அங்கிருந்து சென்றிருக்கிறார். 

காமாட்சி

பின்னர் அங்கிருந்து தப்பிசென்ற காமாட்சி, இது குறித்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ஆனால் இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எஸ்பி அலுவலகத்தில் தற்போது புகார் அளித்திருக்கிறார். இந்த புகார் மூலமாக விஷயம் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது.

பாலியல் பாலாத்கார முயற்சி மட்டுமல்லாது தாயத்துக்காக தன்னிடம் ரூ.20 ஆயிரத்தை முறைகேடு செய்துவிட்டதாகவும் காமாட்சி கூறியிருக்கிறார். ஆனால் இந்த விவகாரம் குறித்து செல்வராஜ் தரப்பிலும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில், தான் குறி சொல்வதை கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும், தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு தடையை உருவாக்க வேண்டும் என்று ஒரு சிலர் திட்டமிட்டு இளம்பெண் மூலம் தன்னை சிக்க வைக்க முயலகிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web