நிதீஷ் குமார் மாநிலங்களவைக்கு செல்ல எதிர்ப்பு... இல்லம் முன்பு தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிடுவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து அவரது கட்சித் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாட்னாவில் உள்ள அவரது இல்லம் முன்பு ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் திரண்டு கோஷங்கள் எழுப்பினர். நிதீஷ் குமார் முதல்வராகவே தொடர வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்தனர்.
நிதீஷ் குமார் மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக பாஜக சார்பில் ஒருவர் பிகார் முதல்வராக பதவியேற்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஐக்கிய ஜனதா தள தேசிய செயல் தலைவர் சஞ்சய் ஜா மற்றும் அமைச்சர் விஜய் குமார் சௌதரி உள்ளிட்டோருடன் நடந்த ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சித் தொண்டர்கள் அவரது இல்லம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். “பிகார் முதல்வராக நிதீஷ் குமார் மட்டுமே இருக்க வேண்டும்” என்று அவர்கள் கோஷமிட்டனர். இதுகுறித்து ராஜீவ் ரஞ்சன் பேசுகையில், நிதீஷ் குமார் மாநிலங்களவைக்கு செல்லக் கூடாது, அவரது மகன் நிஷாந்த் குமார் போட்டியிட வேண்டும் என்றார். ஆனால் அது நிதீஷ் குமாரின் தனிப்பட்ட முடிவு என்றும் அதற்கு கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்றும் சஞ்சய் சிங் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
