உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் நிதிஷ்குமார்... 10 முறை முதல்வராக பதவியேற்பு!

 
நிதிஷ்குமார்

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக 10-வது முறையாகப் பதவியேற்றதன் மூலம், லண்டனில் உள்ள உலக சாதனைப் புத்தகத்தால் (World Book of Records) அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, சாதனையாளராகப் பதிவிடப்பட்டுள்ளார்.

பீகார் நிதிஷ்குமார்

நிதிஷ்குமார் அவர்கள், சுதந்திர இந்தியாவின் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக 10 முறை பதவியேற்ற ஒரே நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளதாக உலக சாதனைப் புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இந்த விவரத்தை ஐக்கிய ஜனதா தள தேசியச் செயல் தலைவர் சஞ்சய்குமார் ஜா வெளியிட்டுள்ளார்.

பீகார் நிதிஷ்குமார்

சஞ்சய்குமார் ஜா தனது எக்ஸ் தளப் பதிவில், "10-வது முறையாக முதல்-மந்திரியாகப் பதவியேற்றுள்ள நிதிஷ்குமார் அடைந்த அசாதாரண மைல்கல்லை உலக சாதனைப் புத்தகம் அங்கீகரித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. இது இந்தியாவின் ஜனநாயகப் பயணத்தில் உண்மையிலேயே அரிய சாதனை. பத்து முறை ஒரு மாநிலத்தை வழிநடத்துவது என்பது வெறும் தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, இது பீகாருக்கு ஒரு வரலாற்றுத் தருணமாகவும் அதன் ஜனநாயக வலிமைக்கு ஒரு சான்றாகவும் நிற்கிறது," என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த பீகார் சட்டசபைத் தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணி 202 தொகுதிகளை வென்று அமோக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!