நிதிஷ்குமார் முதல்வர் பதவியிலிருந்து விலகல்... பெரும் பரபரப்பு!
பிகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். இதற்காக அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக இதுகுறித்த தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அவர் அதனை உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பிகார் மக்களிடமிருந்து நம்பிக்கையும் ஆதரவையும் பெற்றுள்ளதாக கூறினார். அந்த ஆதரவின் காரணமாகவே மாநிலம் வளர்ச்சி பாதையில் முன்னேறி வருவதாகவும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், தனது அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்து பிகார் பேரவையின் இரு அவைகளிலும் நாடாளுமன்றத்திலும் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது தனது விருப்பமாக இருந்ததாகவும் கூறினார். அதனால் இப்போது மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். புதிய அரசு அமைந்தாலும் தன்னுடைய ஆதரவும் வழிகாட்டுதலும் தொடரும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
