நிதிஷ் குமார் 10வது முறையாக முதல்வராக பதவியேற்பு!

 
பதவியேற்பு
 

பீஹார் சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிரடியாக 202 இடங்களை கைப்பற்றி ஆட்சியைத் தொடரும் நிலையை உறுதிப்படுத்தியது. இதில் பா.ஜனதா 89 இடங்களிலும், ஐக்கிய ஜனதாதளம் 85 இடங்களிலும் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற ஐ.ஜ.க மற்றும் பா.ஜக எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியாக கூடி புதிய அரசு அமைப்பு குறித்து ஆலோசித்தனர்.

நிதிஷ்குமார்

இதன்போது, பா.ஜனதா சட்டமன்றக் குழு தலைவராக சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக விஜய் குமார் சின்கா தேர்வானார். உத்தரபிரதேச துணை முதல்–மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா, மத்திய மந்திரி அர்ஜுன் மேக்வால், முன்னாள் மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி உள்ளிட்டோர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.

ஐக்கிய ஜனதாதளம் சட்டமன்றக் குழுக் கூட்டத்தில் நிதிஷ் குமார் ஒருமனதாக தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்றக் குழு தலைவராகவும் (முதல்வராகவும்) அவர் தேர்வு செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டது. இன்று பத்னாவில் நடைபெறும் விழாவில் கவர்னர் ஆரிப் முகமது கான், நிதிஷ் குமாருக்கு 10-வது முறையாக முதலமைச்சர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!