ராஜினாமா அளித்த நிதீஷ் குமார் ... நவம்பர் 20ல் மீண்டும் முதல்வராகப் பதவியேற்பு!

 
நிதிஷ்குமார்
 

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் இன்று ஆளுநர் ஆரிஃப் முகமது கானைச் சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கி, சட்டப்பேரவையை கலைக்க பரிந்துரைத்தார். சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரும் வெற்றி பெற்ற நிலையில், நிதீஷ் குமார் மீண்டும் பதவியேற்கத் தயாராகிறார்.

நிதிஷ்குமார்

பீகார் தேர்தலில் கூட்டணியில் பாஜக 89, ஐக்கிய ஜனதா தளம் 85 என தலா பெரிய வெற்றி பெற்றதால், நிதீஷ் குமார் 10-வது முறையாக முதல்வர் பதவியை ஏற்கும் நிலை உருவானது. வரும் நவம்பர் 20, வியாழக்கிழமை பாட்னா காந்தி மைதானத்தில் நடைபெறும் விழாவில் அவர் பதவியேற்க உள்ளார். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

பீகார் நிதிஷ்குமார்

இதேநேரத்தில், நிதீஷ் குமார் தலைமையிலான தற்போதைய அமைச்சரவை இன்று இறுதி கூட்டத்தையும் நடத்தியது. நவம்பர் 19 அன்று சட்டப்பேரவை கலைக்கப்பட்டு, அடுத்த நாள் நிதீஷ் குமார் மீண்டும் பதவியேற்பார் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!