நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்து? ... இன்ஸ்டாவில் சைலண்ட் சிக்னல்!
பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ், துபாய் தொழிலதிபர் ராஜித் இப்ரானை காதல் திருமணம் செய்ய இருப்பதாக கடந்த ஆகஸ்ட் இறுதியில் அறிவித்தது திரையுலகில் கவனம் பெற்றது. வரும் ஜனவரியில் சென்னையில் திருமணம் நடைபெறும் என்றும், திருமணத்துக்குப் பிறகும் நடிப்பைத் தொடர்வேன் என்றும் அவர் உறுதியாக கூறியிருந்தார். ஆனால், இந்தத் திருமணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக நேற்று மாலை முதல் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காரணமாக, நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிராமில் ராஜித் இப்ரானுடன் இருந்த புகைப்படங்களை அனைத்தையும் நீக்கியுள்ளார். அதேபோல், ராஜித் இப்ரானும் நிவேதாவுடன் இருந்த புகைப்படங்களை அகற்றியதுடன், இருவரும் ஒருவரை ஒருவர் ‘அன்ஃபாலோ’ செய்துள்ளனர். இந்த மாற்றங்கள் ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதன் மூலம், இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டுள்ளதாகவும், திட்டமிட்ட திருமணம் நிறுத்தப்பட்டதாகவும் திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதுகுறித்து நிவேதா பெத்துராஜ் அல்லது ராஜித் இப்ரான் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. நடிகையின் அடுத்தடுத்த சினிமா அறிவிப்புகள் வருமா என்பதும் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
