10, 11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை... அமைச்சர் உறுதி...!

 
அன்பில் மகேஷ் மாணவர்கள்

தமிழகத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை உட்பட 4  மாவட்டங்களை புரட்டி போட்ட மழை கடந்த வாரத்தில் தென் மாவட்டங்களை புரட்டி போட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற இருக்கும் பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுமா என பள்ளிக்கல்வி அமைச்சரிடம் எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அன்பில் மகேஷ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகம் முழுவதும் நடப்பு கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்   மார்ச் 26, 2024ல் தொடங்க உள்ளன. இந்த தேர்வுகள்   ஏப்ரல் 8ம் தேதியுடன் நிறைவடைகிறது.

தேர்வு

 அதேபோல 11ம் வகுப்புக்கு மார்ச் 4ல் தொடங்கி   மார்ச் 25ம் தேதி வரை நடைபெறுகிறது.  12ம் வகுப்பை பொறுத்தவரை  மார்ச் 1ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நீடிக்கிறது.10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்   மே 10ம் தேதி வெளியாகும்.  11ம் வகுப்பு பொதுத்தேர்வு  முடிவுகள்  மே 14ம் தேதியும்,  12ம் வகுப்பு பொதுத்தேர்வு   மே 6ம் தேதியும் வெளியாகும் எனத் தெரிகிறது. 10ம் வகுப்பு   செய்முறை தேர்வு பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி பிப்ரவரி 29ம் தேதியில்  முடிவடையும்.    

தேர்வு

11ம் வகுப்பு செய்முறை தேர்வு  பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி பிப்ரவரி 24ம் தேதி முடிவடைகிறது.  12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள்  பிப்ரவரி 12ம் தேதி முதல் பிப்ரவரி 17ம் தேதி வரை நடைபெறுகிறது.இந்நிலையில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொதுத்தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இல்லை.  மழை, வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களில் பாடப் புத்தகங்களை இழந்த மாணவ மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்; தேவையான பாட புத்தகங்கள் கையிருப்பில் உள்ளன எனக் கூறியுள்ளார். 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web