வெனிசுலாவில் தேர்தல் நடத்தப்படாது... ட்ரம்ப் அதிரடி!

 
trump
 

வெனிசுலா மீது அமெரிக்க போர் விமானங்கள் நேற்று முன்தினம் கடும் தாக்குதல் நடத்தின. போதைப்பொருள் பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள் கைது செய்து, அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றன. இந்த சம்பவம் உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் வெனிசுலா துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்சை புதிய இடைக்கால அதிபராக அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளது. அதிபருக்குரிய அனைத்து அதிகாரங்களும் அவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரோ நிரந்தரமாக காணவில்லை என்று நீதிபதிகள் அறிவிக்காததால், உடனடி தேர்தல் அவசியம் இல்லை என கூறப்படுகிறது.

வெனிசுலா

இதனால் வெனிசுலாவில் 30 நாட்களுக்குள் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வெனிசுலா இப்போதே தேர்தலை நடத்த முடியாது என்றார். வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு செல்லும் முன் அந்த நாடு முழுமையாக மறுகட்டமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!