20 நாளா குடிக்க தண்ணி இல்ல... மின்சாரம் இல்லை.. 100 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு.. திருவண்ணாமலையில் மக்கள் சாலை மறியல்!

 
வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி அருகே சாலவேடு கிராமம் திப்பம்மாள் நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதானதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 20 நாட்களாக மின்வசதி இல்லையென கூறப்படுகிறது.

தற்போது கோடை காலம் என்பதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் நெற்பயிர்கள், கத்திரிக்காய் செடிகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் காய்ந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். அதேபோல் குடிநீர் கிடைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர். 

வந்தவாசி

இந்நிலையில் 20 நாட்களாக பழுதான டிரான்ஸ்பார்மரை மின்சாரத்துறை அதிகாரிகள் சரி செய்யாமல் உள்ளதை கண்டித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்குள்ள  நெடுஞ்சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் இல்லாததை சுட்டிக்காட்டி காலி குடங்களுடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

வந்தவாசி

இதனையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் வந்தவாசி – மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web