நாடு முழுவதும் அடுத்த 3 மாதங்களுக்கு இலவசம்! உடனே பயன்படுத்திக்கோங்க!

 
ஆதார்

இந்திய குடிமகனின் அடையாள அட்டை சான்றாக ஆதார் அட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. முகவரி, இருப்பிட மற்றும் தனிநபர் அடையாள சான்றாக மட்டுமல்ல டிக்கெட் முன்பதிவுகளில் தொடங்கி அனைத்திற்கும் ஆதார் அட்டை அவசியமாகிறது.இதில் முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம், திருத்தல், மாற்றல் சேர்த்தல் என அப்டேட் செய்ய ஒவ்வொரு முறையும் ரூ50 வசூலிக்கப்பட்டு வந்தது. இதனால் பலர் தேவைகள் இருந்தும் புதுப்பிக்காமல் உள்ளனர்.

ஆதார்

ஆதார் அட்டையின் அவசியம் குறித்து மக்களுக்கு மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சேவையை இலவசமாக செய்து முடிக்க மத்திய அரசு இந்த சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் 3 மாதங்களுக்கு ஆதார் அட்டை விவரங்களை இணைய தளம் மூலம் இலவசமாக புதுப்பிக்கலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று இதுவரையில் புதுப்பிக்காதவர்கள் தங்கள் ஆவணங்களை  இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது. இந்த சேவையை மார்ச் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை இலவச சேவையாக கொடுக்கலாம் என  ஆணையம் முடிவெடுத்துள்ளது.  

ஓய்வூதியம் பெற ஆதார் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு
இலவச சேவையை பெறுவது எப்படி?

இந்த சேவையை மைஆதார் 'my Aadhaar' எனும் இணையதளத்தில் மட்டுமே இலவசமாகப் பெற முடியும். https://myaadhaar.uidai.gov.in/ எனும் இணையதளத்தில் தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி தங்களின் தரவுகளை புதுப்பித்துக் கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளது. இந்த இணையதளத்தில் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி  உள்நுழைய வேண்டும் . உடனே பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு, 'Document Update' என்ற வாசகத்தை கிளிக் செய்ய வேண்டும். அதில்  ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள் தெரிய வரும். தற்போது  புதுப்பிக்க வேண்டிய தகவல்கள் அதாவது  முகவரி மற்றும் அடையாள ஆவணங்களின் நகல்களை பதிவேற்றம் செய்து தங்கள் ஆதாரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web