சென்னையில் அதிகனமழைக்கு வாய்ப்பில்ல... வெதர்மேன் பளிச்!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை - இந்தியப் பெருங்கடலைச் சுற்றி உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி கடந்த (நவ.27) புயலாக வலுவடைந்தது. ‘டிட்வா’ எனப் பெயரிடப்பட்ட இந்த புயல், தற்போது வடதமிழகம் நோக்கி மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரங்களுக்கு அருகே தாக்கம் ஏற்படுத்தக்கூடும் என வானிலை அமைப்புகள் மதிப்பிட்டு வருகின்றன.

புயல் இலங்கை மலைப் பகுதிகளுக்குள் நுழைந்ததால் தற்போதைக்கு சிறிதளவு வலுவிழந்த நிலையில் உள்ளது. இதுவரை ஏற்பட்ட கனமழை, வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு காரணமாக இலங்கையில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புயல் மீண்டும் கடல் பகுதிக்குள் சென்றவுடன் பலம் பெறக்கூடும் என்றும், இன்று இலங்கையில் கனமழை பெய்யும் கடைசி நாள் எனவும் முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகை, தஞ்சை தென்பகுதிகள், புதுக்கோட்டை கடலோரம், திருவாரூர் பகுதிகளில் கனமழை வாய்ப்பு அதிகம் இருப்பதாக ‘தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜான் பதிவு செய்துள்ளார். சென்னைக்கு இந்த புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு குறைவான நிலையில், நவம்பர் 29 பிற்பகல் முதல் 30 வரை மழை அதிகரிக்கலாம் என்றும், சில பகுதிகளில் கன-மிக கனமழை சாத்தியம் உள்ளதாகவும் அவர் கணித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
