நாளை விடுமுறை கிடையாது!! பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்!!

 
விடுமுறை

தமிழகம் முழுவதும் நாளை மார்ச் 11ம் தேதி 2 வது சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல செயல்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். நாளைய தினம் திங்கட்கிழமை பாடவேளையை பின்பற்றவும்  பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடுமுறை

நடப்பு கல்வி ஆண்டின் மழை கால  மற்றும் உள்ளூர் விடுமுறைகளை ஈடு செய்யும் வகையில்  அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகள்  செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி சென்னையில் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திங்கட்கிழமை பாடவேளையில் வகுப்புகள் நடைபெறும்.

விடுமுறை

அரசு பொதுத்தேர்வை மாணவர்கள் எளிதாக எழுத வழிகாட்டும் வகையிலும், அச்சத்தை தவிர்க்கவும் மாணவர்களை தயார் செய்யும் வகையிலும் நாளைய தினம் பணிநாளாக செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிறப்பித்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web