செல்போன்ல இன்டர்நெட் ஸ்பீட் இல்லையா? இதை ட்ரை பண்ணி பாருங்க.. செம ஸ்பீடா இருக்கும்!

 
குட் நியூஸ்!! இண்டர்நெட் இல்லாமலேயே இந்த ஆஃப்கள் செயல்படும்!!

இன்றைய காலகட்டத்தில் நம் அனைவருக்கும் அவசியம் தேவைப்படும் ஒண்ணுன்னா அது இன்டர்நெட், இன்னொன்று அந்த இன்டர்நெட்க்கு நல்ல ஸ்பீட் இரண்டும் தான். ஆனால் இன்று இருக்ககூடிய சூழ்நிலையில் நாம் பயன்படுத்தும் அனைத்து வகை இன்டர்நெட்டிலும் இன்டர்நெட்டின் ஸ்பீட் மிகவும் குறைவாக இருக்கிறது.

உதாரணமாக யூடியூபில் வீடியோ பார்ப்பது முதல் நெட்ஃபிளிக்ஸில் சீரிஸ் பார்ப்பது வரை அனைத்து விதமான வேலைகளுக்கும் வேகமான இன்டர்நெட் சேவை அவசியமாகிறது. உங்களுடைய டேட்டா பேக் மிகவும் வேகமான இன்டர்நெட் சேவையை வழங்கினாலும், உங்கள் போனில் உங்களுக்குத் தெரியாமல் சேவ் செய்யப்பட்ட டேட்டாக்களின் காரணமாக உங்களுடைய இன்டர்நெட் வேகம் கணிசமாகக் குறைகிறது.

அதை எப்படிச் செய்வது என்று தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையைப் பின்பற்றி, உங்கள் ஸ்மார்ட்போனின் இன்டர்நெட் வேகத்தை நீங்கள் கணிசமாக அதிகரிக்கலாம்.

Internet

முதலில் உங்களுடைய ஸ்மார்ட் போனில் உள்ள கூகுள் குரோம் பிரவுசரை திறந்து, பின் அதற்கு மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளி போன்ற ஐகானை கிளிக் செய்ய வேண்டும். பிறகு செட்டிங்ஸ் (Settings) என்ற விருப்பத்தை கிளிக் செய்து, அதன் உள்ளிருக்கும் சைட் செட்டிங் (Site Settings) என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின்பக்க கீழே ஸ்க்ரோல் செய்தால் ஸ்டோரேஜ் அல்லது டேட்டா ஸ்டோர்டு என்ற விருப்பம் காண்பிக்கப்படும்; இதை கிளிக் செய்து கிளியர் ஆல் டேட்டா (Clear all data) என்பதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உங்கள் ஸ்மார்ட் போனில் உங்களுக்கு தெரியாமல் சேவ் செய்யப்பட்ட இன்டர்நெட் டேட்டாக்கள் அனைத்தும் கிளியர் செய்யப்படும். இதன் மூலம் உங்கள் இன்டர்நெட் வேகம் அதிகரிக்கும்.

இரண்டாவதாக, உங்களுடைய கூகுள் குரோம் பிரவுசரை திறந்து, மறுபடியும் வலது மேல் மூலையில் இருக்கும் மூன்று புள்ளி போன்ற ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அடுத்தபடியாக, செட்டிங்ஸ் என்ற விருப்பத்தை கிளிக் செய்து அதில் சிங்க் ஆன் (Sync On) என்று காண்பிக்கப்படும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இந்த ஆப்ஷன் ஆன் (ON) இல் இருந்தால், அதை உடனடியாக ஆஃப் (OFF) செய்யவும். இந்த ஆப்ஷனை ஆஃப் செய்வதன் மூலம் உங்கள் டேட்டா சேவ் (Data save) செய்யப்படும் இதனால் இன்டர்நெட் வேகம் அதிகம் ஆகும்.

Internet

கடைசியாக உங்கள் ஸ்மார்ட் போனின் செட்டிங்ஸ் ஓப்பன் செய்து, மொபைல் நெட்வொர்க் (Mobile Network) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது அதன் உள்ளிருக்கும் டேட்டா சேவர் (Data saver) என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். இந்த டேட்டா சேவர் அம்சம் ஆன்ல இருந்தால் அதை ஆஃப் செய்து வைப்பது உங்கள் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க உதவும்.

இப்படி செய்வதன் மூலம் பேக்ரவுண்டில் இயக்கப்படும் தேவையில்லாத சில ஆப்ஸ்கள் உரியும் டேட்டாவை இந்த அம்சம் தடுக்கிறது. இதன் மூலம் உங்களுடைய இன்டர்நெட் வேகத்தை நீங்கள் கணிசமாக அதிகரிக்கலாம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web