ஆம்புலன்சுக்கு கொடுக்க கூட பணமில்லையே!! குழந்தையின் சடலத்துடன் பொதுப்பேருந்தில் ஏறிய தந்தை!! தொடரும் அவலங்கள் !!

 
நெகிழ்ச்சி

ஆம்புலன்சிற்கு கொடுக்க கூட பணவசதியின்றி உயிரிழந்தவர்களின் உடலை இருசக்கர வாகனம், தள்ளுவண்டியிலோ அல்லது சுமந்தோ செல்லும் நிகழ்வுகள் சமீபமாக அதிகரித்து வருகின்றன.அந்த வகையில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி  காண்பவர்களை நெகிழச் செய்துள்ளது.  மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் அஷிம் தேப்சர்மா. இவருக்கு 5 மாத ஆண்குழந்தை ஒன்று உள்ளது. இக்குழந்தைக்கு  தீவிர உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. குழந்தையை  சிகிச்சைக்காக சிலிகுரி பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  அனுமதித்தனர்.  

கொரோனா காலக்கட்டத்தில் குழந்தை பிறப்பு சரிவு..!

6 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி குழந்தை மருத்துவமனையிலேயே உயிரிழந்தது.  மருத்துவமனையில் இருந்து  அஷிம் வீடு இருக்கும் பகுதி சுமார் 200 கிமீ தூரம் . இதனால் உடலை வீட்டிற்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதிக்காக  ஆம்புலன்ஸை அனுகியுள்ளார். ஏற்கனவே மருத்துவமனையில் ரூ16000 செலவாகி விட்டது.  ஆம்புலன்சுக்கு தர  பணம் இல்லாததால்  இலவச ஆம்புலன்ஸ் சேவையை எதிர்பார்த்தார். ஆனால் ரூ8000க்கு குறைவாக ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. உடனே அஷிம் பொதுப்பேருந்து மூலமே குழந்தையின் உடலை எடுத்து செல்ல முடிவு செய்தார்.

ஆம்புலன்ஸ்

சடலத்துடன் பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை இதனால்  குழந்தையின் உடலை ஒரு பையில் வைத்து மறைத்து சுமார் 200 கிமீ தூரம் பேருந்திலேயே வந்துள்ளார்.இந்த அதிர்ச்சி சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் கண்டனக் குரல் எழுப்பியுள்ளன. அதே நேரத்தில் அரசின் இலவச ஆம்புலன்ஸ் சேவை திட்டம் ஏன் இவருக்கு உதவவில்லை எனக்  கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web