ஜூன் 17 முதல் பவுண்டரிக்கு வெளியே கேட்ச் இல்லை... புதிய விதிமுறை!

 
கிரிக்கெட்

எம்சிசி கிரிக்கெட் கேட்ச் குறித்து புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.   தற்போதைய விதிமுறையின்படி முதல்முறை பந்தினை தொடுவது பவுண்டரி எல்லைக்குள் இருந்தால் போதுமானது.பிறகு, எல்லைக் கோட்டுக்கு வெளியே சென்றாலும் பந்தினை தூக்கிவீசும்போது கால் தரையில் படாமல் எத்தனை முறை வேண்டுமானாலும் பந்தினை தடுக்கலாம்.  மீண்டும் பவுண்டரி லைனுக்குள் வந்து பிடித்தால் அவுட் கொடுக்கப்படும். அது விதிமுறைக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. இந்த விதியை 'பன்னி-ஹோப்' என அழைக்கப்படுகிறது. பல  ஐபிஎல் போட்டிகளிலும் இது நடந்திருக்கிறது.

தற்போது, இந்த விதியை எம்சிசி மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் மாற்றவிருப்பதாகக் கூறியுள்ளது.  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உடன் சேர்ந்து இந்த விதியை அடுத்தாண்டு அக்டோபர் முதல் அதிகாரபூர்வமாக அமலுக்குக் கொண்டுவர இருப்பதாக இஎஸ்பிஎன் தகவல் அளித்துள்ளது. இந்த மாதமே இந்த விதியை ஐசிசி அமல்படுத்தவிருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கும் ஜூன் 17ம் தேதி  முதல்  அமல்படுத்தவிருக்கிறது. இந்த விதி மாற்றம் ஆட்டத்தின் சுவாரஸ்யம், உடற்தகுதியை கெடுப்பதாகவும் தவறானதெனவும் ரசிகர்கள் கருதுகின்றனர்.  இந்தப் புதிய விதியை பொறுத்தவரை ஃபீல்டர் வெளியே சென்று பந்தினை தடுத்து அடுத்ததாக பவுண்டரி லைனுக்குள் வந்து கேட்ச்சை நிறைவு செய்ய வேண்டும். 

ஒன்றுக்கு மேற்பட்ட முறை பந்தினை பவுண்டரி எல்லைக்கு வெளியே தொட்டால் அது விக்கெட் கொடுக்கப்படாது. மாறாக பவுண்டரி கொடுக்கப்படும்.  இதற்கு முன்பாக இருந்த விதி நியாயமற்றதாக எம்சிசி கருதுவதால் இந்த புதிய விதியை உருவாக்கியுள்ளது.ஃபீல்டர்கள் இன்னமும் தங்களது அற்புதமான கேட்சை பிடிக்கலாம்.  எல்லைக்கோட்டுக்கு வெளியே ஒருமுறைச் சென்று தடுத்துவிட்டு எல்லைக்கோட்டுக்கு உள்ளே வந்து கேட்ச்சை நிறைவு செய்யலாம் எனக்  கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது