செம அப்டேட்!! வாட்ஸ் அப் பயன்படுத்த இனி நம்பரே தேவையில்லை!!

 
வாட்ஸ் அப்

சர்வதேச அளவில் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலி தகவல் பரிமாற்ற செயலிகளில் முண்ணனியில் இருந்து வருகிறது. பில்லியன் கணக்கில் பயனர்களை பெற்றுள்ள வாட்ஸ் அப் பயனர்களை தக்க வைக்கும் வகையிலும் தொழில்நுட்ப அடிப்படையில் அப்டேட் செய்யும் வகையிலும் அடுத்தடுத்த அப்டேட்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் செயலிகளை போலவே  வாட்ஸ் அப் செயலியிலும் Username முறை கொண்டு வரப்படும் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, பயனர்கள் தங்கள் கணக்குகளுக்கு தனித்துவமான பயனர் பெயர்களை அமைத்துக் கொள்ளலாம்.  அதாவது, வாட்ஸ் அப் யூசர்-நேம் கொண்டு ஒரு தனிநபர் வாட்ஸ் அப் கணக்கை அடையாளம் காணலாம்.  தற்போதுள்ள நடைமுறைப்படி மொபைல் எண் மூலமே அறியப்படுகிறோம். இனி யூசர் நேம் மூலம் எதிர்காலத்தில் வாட்ஸ் அப் பயனர்கள் தங்களின் பெயர்களை அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.  இந்த புதிய அம்சத்தை நிறுவனம் மிக விரைவில்   மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.  இதனால் வாட்ஸ் அப் பயனர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

தகவல் பரிமாற்ற செயலிகளில் முண்ணனியில் இருப்பது வாட்ஸ் அப் நிறுவனம். உலகம் முழுவதும் பில்லியன் கணக்கில் பயனர்களை பெற்ற வாட்ஸ் அப் மெட்டா நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது.  பயனர்களை தக்க வைக்கவும், தொழில் நுப்ட வகையில் மேம்படுத்தவும் அவ்வப்போது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் அனுப்பி விட்ட மெசேஜில் தவறு இருந்தா அதனை டெலிட் செய்ய முடியுமே தவிர எடிட் செய்யும் வசதி இல்லை. புதியதாக அனுப்பலாம் அல்லது டெலிட் செய்யலாம் . இரண்டே ஆப்ஷன் தான். பயனர்களின் இந்தக் குறைகளை போக்கும் வகையில் தற்போது லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப்

அதன்படி வாட்ஸ் அப்பில்  அனுப்பிய மெசேஜில் தவறு இருந்தால் அடுத்த 15 நிமிடங்களில் அதை எடிட் செய்ய முடியும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது . இந்த அறிவிப்பை மெட்டா நிறுவன இயக்குநர் மார்க் சக்கர்பெர்க் தனது ஃபேஸ்புக் பதிவில், பயனர்கள் இனி வாட்ஸ் அப்பில் அனுப்பும் மெசேஜ்களை எடிட் செய்யலாம் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி தற்போது புதிய அப்டேட்டாக வாட்ஸ் அப்பில், ஒருவருக்கு அனுப்பிய மெசேஜை எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. சில நேரங்களில் நாம் அனுப்ப வேண்டிய மெசேஜில் தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பல நேரங்களில் அந்த மெசேஜை டெலிட் செய்து விட்டு, வேறு மெசேஜ் அனுப்ப வேண்டியிருக்கும்.  இனி  அனுப்பிய மெசேஜில் தவறு இருந்தால் அடுத்த 15 நிமிடங்களில் அதை எடிட் செய்து விடலாம்.  

சர்வதேச அளவில் தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ் அப் பெரிதும் உதவுகிறது. வாடிக்கையாளர்களின் வசதி, யூசர் அனுபவத்தை மேம்படுத்துவதே எங்களின் முக்கிய குறிக்கோள் என மெட்டா தெரிவித்துள்ளது. இந்த புதிய அப்டேட் மட்டும் இல்லாமல்  ஏற்கனவே பகிரப்பட்ட  தகவல்கள் குறித்து ரிப்போர்ட் செய்தல், ஸ்பேம் அழைப்புகளை தவிர்த்தல்,  வாய்ஸ் நோட்களை ஸ்டேட்டஸில் வைத்தல் என பலவிதமான புதிய  அம்சங்களை வாட்ஸ் அப் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.  அத்துடன் ஒரே வாட்ஸ் அப்பை 4 போன்களில்  பயன்படுத்துவதற்கான வசதியையும்  மெட்டா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

வாட்ஸ் அப்
அதே போல் வாட்ஸ் அப் நிறுவனம் வாடிக்கையாளர்களின் பிரைவஸிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் லாக் சாட்   வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் ஒருவர் மற்றொருவருடனான சாட்-டை மட்டும் லாக் செய்து வைத்துக் கொள்ளலாம். இதனை பயன்படுத்தி  தனிப்பட்ட உரையாடல்கள், தொழில் ரீதியான சாட்கள் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் whatsapp lock செய்யலாம் .  finger print, password மூலமாக இதனை லாக் செய்ய முடியும். இதுமட்டுமின்றி லாக் செய்யப்பட்ட சாட்டின் போது பகிர்ந்து கொள்ளப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் மொபைலில் உள்ள கேலரியில் சேமிக்கப்படாமலும் செய்து கொள்ளலாம் என வாட்ஸ் அப் மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web